113. அல் ஃபலக் - குர்ஆன்
- 1. (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
- 2. அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
- 3. இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
- 4. இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
- 5. பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).