அந்நாஸிஆத் - குர்ஆன் - ஹருன் யஹ்யா
-
1. (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
-
2. (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
-
3. வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
-
4. முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
-
5. ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
-
6. பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;
-
7. அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
-
8. அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
-
9. அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
-
10. "நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.
-
11. "மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"
-
12. "அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.
-
13. ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
-
14. அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
-
15. (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
-
16. `துவா` என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
-
17. "நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."
-
18. இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.
-
19. "அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
-
20. ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
-
21. ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
-
22. பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
-
23. அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
-
24. "நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான்.
-
25. இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
-
26. நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.
-
27. உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
-
28. அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
-
29. அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.
-
30. இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
-
31. அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
-
32. அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
-
33. உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
-
34. எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
-
35. அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
-
36. அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
-
37. எனவே, எவன் வரம்பை மீறினானோ -
-
38. இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
-
39. அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
-
40. எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
-
41. நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
-
42. (நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
-
43. அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
-
44. அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
-
45. அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
-
46. நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
பகிர்
1
அல் பாத்திஹா
2
அல் பகரா
3
ஆலு இம்ரான்
4
அன்னிஸா
5
அல் மாயிதா
6
அல் அன்ஆம்
7
அல் அஃராப்
8
அல் அன்ஃபால்
9
அத்தவ்பா
10
யூனுஸ்
11
ஹூது
12
யூஸுஃப்
13
அர் ரஃது
14
இப்ராஹீம்
15
அல் ஹிஜ்ர்
16
அந் நஹ்ல்
17
பனீ இஸ்ராயீல்
18
அல் கஹ்ஃபு
19
மர்யம்
20
தாஹா
21
அல் அன்பியா
22
அல் ஹஜ்
23
அல் முஃமினூன்
24
அந் நூர்
25
அல் ஃபுர்கான்
26
அஷ்ஷுஅரா
27
அந் நம்ல்
28
அல் கஸஸ்
29
அல் அன்கபூத்
30
அர் ரூம்
31
லுக்மான்
32
அஸ் ஸஜ்தா
33
அல் அஹ்ஸாப்
34
ஸபா
35
ஃபாத்திர்
36
யாஸீன்
37
அஸ் ஸாஃப்பாத்
38
ஸாத்
39
அஸ்ஸுமர்
40
அல் முஃமின்
41
ஃபுஸ்ஸிலத்
42
அஷ்ஷூரா
43
அஸ்ஸுக்ருஃப்
44
அத் துகான்
45
அல் ஜாஸியா
46
அல் அஹ்காஃப்
47
முஹம்மத்
48
அல் ஃபத்ஹ்
49
அல் ஹுஜ்ராத்
50
காஃப்
51
அத் தாரியாத்
52
அத் தூர்
53
அந்நஜ்ம்
54
அல் கமர்
55
அர் ரஹ்மான்
56
அல் வாகிஆ
57
அல் ஹதீத்
58
அல் முஜாதலா
59
அல் ஹஷ்ர்
60
அல் மும்தஹினா
61
அஸ் ஸஃப்
62
அல் ஜும்ஆ
63
அல் முனாஃபிகூன்
64
அத்தகாபுன்
65
அத்தலாக்
66
அத்தஹ்ரீம்
67
அல் முல்க்
68
அல் கலம்
69
அல் ஹாக்கா
70
அல் மஆரிஜ்
71
நூஹ்
72
அல் ஜின்
73
அல் முஸ்ஸம்மில்
74
அல்முத்தஸிர்
75
அல்கியாமா
76
அத் தஹ்ர்
77
அல் முர்ஸலாத்
78
அந் நபா
79
அந்நாஸிஆத்
80
அபஸ
81
அத் தக்வீர்
82
அல் இன்ஃபிதார்
83
அல் முதஃப்பிபீன்
84
அல் இன்ஷிகாக்
85
அல் புரூஜ்
86
அத்தாரிக்
87
அல் அஃலா
88
அல் காஷியா
89
அல் ஃபஜ்ரி
90
அல்பலது
91
அஷ் ஷம்ஸ்
92
அல் லைல்
93
அல்லுஹா
94
அஷ்ஷரஹ்
95
அத் தீன்
96
அல் அலக்
97
அல் கத்ர்
98
அல் பய்யினா
99
அஸ்ஸில்ஸால்
100
அல் ஆதியாத்
101
அல்காரிஆ
102
அத் தகாஸுர்
103
அல் அஸ்ர்
104
அல் ஹுமஸா
105
அல் ஃபீல்
106
குறைஷ்
107
அல் மாஊன்
108
அல் கவ்ஸர்
109
அல் காஃபிரூன்
110
அந் நஸ்ர்
111
தப்பத்
112
அல் இஃக்லாஸ்
113
அல் ஃபலக்
114
அந் நாஸ்