• 1. நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்) "நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்" என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.
  • 2. "அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்" (என்று அந்த ஜின் கூறலாயிற்று).
  • 3. "மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது, அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.
  • 4. "ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
  • 5. மேலும் "மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்" என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.
  • 6. "ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர், இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.
  • 7. "இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.
  • 8. "நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.
  • 9. "(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான்.
  • 10. "அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.
  • 11. "மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர், நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.
  • 12. "அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.
  • 13. "இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்." எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.
  • 14. "இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.
  • 15. "அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர்" (என்று அந்த ஜின் கூறிற்று).
  • 16. "(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.
  • 17. "அதைக் கொண்டு நாம் அவர்களைச் சோதிப்பதற்காக, ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, அவனைக் கொடிய வேதனையில் அவன் புகுத்தி விடுவான்.
  • 18. "அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.
  • 19. "மேலும், நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் அவனைப் பிரார்த்தித்தவராக நின்றபோது, அவர்பால் அவர்கள் கூட்டம் கூட்டமாக (வந்து) நெருங்கிவிடுகின்றனர்."
  • 20. (நபியே!) நீர் கூறும்; "நான் பிரார்த்திப்பதெல்லாம் என்னுடைய இறைவனைத் தான்; அன்றியும், நான் அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டேன்."
  • 21. கூறுவீராக, "நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்."
  • 22. கூறுவீராக, "நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.
  • 23. "அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பர்" என (நபியே!) நீர் கூறும்.
  • 24. அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும், எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
  • 25. (நபியே!) நீர் கூறும், "உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.
  • 26. "(அவன்தான்) மறைவனாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.
  • 27. "தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்.
  • 28. "தங்களுடைய இறைவனின் தூதுத்துவச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்."
பகிர்
logo
logo
logo
logo
logo
  • 1.அல் பாத்திஹா
  • 2.அல் பகரா
  • 3.ஆலு இம்ரான்
  • 4.அன்னிஸா
  • 5.அல் மாயிதா
  • 6.அல் அன்ஆம்
  • 7.அல் அஃராப்
  • 8.அல் அன்ஃபால்
  • 9.அத்தவ்பா
  • 10.யூனுஸ்
  • 11.ஹூது
  • 12.யூஸுஃப்
  • 13.அர் ரஃது
  • 14.இப்ராஹீம்
  • 15.அல் ஹிஜ்ர்
  • 16.அந் நஹ்ல்
  • 17.பனீ இஸ்ராயீல்
  • 18.அல் கஹ்ஃபு
  • 19.மர்யம்
  • 20.தாஹா
  • 21.அல் அன்பியா
  • 22.அல் ஹஜ்
  • 23.அல் முஃமினூன்
  • 24.அந் நூர்
  • 25.அல் ஃபுர்கான்
  • 26.அஷ்ஷுஅரா
  • 27.அந் நம்ல்
  • 28.அல் கஸஸ்
  • 29.அல் அன்கபூத்
  • 30.அர் ரூம்
  • 31.லுக்மான்
  • 32.அஸ் ஸஜ்தா
  • 33.அல் அஹ்ஸாப்
  • 34.ஸபா
  • 35.ஃபாத்திர்
  • 36.யாஸீன்
  • 37.அஸ் ஸாஃப்பாத்
  • 38.ஸாத்
  • 39.அஸ்ஸுமர்
  • 40.அல் முஃமின்
  • 41.ஃபுஸ்ஸிலத்
  • 42.அஷ்ஷூரா
  • 43.அஸ்ஸுக்ருஃப்
  • 44.அத் துகான்
  • 45.அல் ஜாஸியா
  • 46.அல் அஹ்காஃப்
  • 47.முஹம்மத்
  • 48.அல் ஃபத்ஹ்
  • 49.அல் ஹுஜ்ராத்
  • 50.காஃப்
  • 51.அத் தாரியாத்
  • 52.அத் தூர்
  • 53.அந்நஜ்ம்
  • 54.அல் கமர்
  • 55.அர் ரஹ்மான்
  • 56.அல் வாகிஆ
  • 57.அல் ஹதீத்
  • 58.அல் முஜாதலா
  • 59.அல் ஹஷ்ர்
  • 60.அல் மும்தஹினா
  • 61.அஸ் ஸஃப்
  • 62.அல் ஜும்ஆ
  • 63.அல் முனாஃபிகூன்
  • 64.அத்தகாபுன்
  • 65.அத்தலாக்
  • 66.அத்தஹ்ரீம்
  • 67.அல் முல்க்
  • 68.அல் கலம்
  • 69.அல் ஹாக்கா
  • 70.அல் மஆரிஜ்
  • 71.நூஹ்
  • 72.அல் ஜின்
  • 73.அல் முஸ்ஸம்மில்
  • 74.அல்முத்தஸிர்
  • 75.அல்கியாமா
  • 76.அத் தஹ்ர்
  • 77.அல் முர்ஸலாத்
  • 78.அந் நபா
  • 79.அந்நாஸிஆத்
  • 80.அபஸ
  • 81.அத் தக்வீர்
  • 82.அல் இன்ஃபிதார்
  • 83.அல் முதஃப்பிபீன்
  • 84.அல் இன்ஷிகாக்
  • 85.அல் புரூஜ்
  • 86.அத்தாரிக்
  • 87.அல் அஃலா
  • 88.அல் காஷியா
  • 89.அல் ஃபஜ்ரி
  • 90.அல்பலது
  • 91.அஷ் ஷம்ஸ்
  • 92.அல் லைல்
  • 93.அல்லுஹா
  • 94.அஷ்ஷரஹ்
  • 95.அத் தீன்
  • 96.அல் அலக்
  • 97.அல் கத்ர்
  • 98.அல் பய்யினா
  • 99.அஸ்ஸில்ஸால்
  • 100.அல் ஆதியாத்
  • 101.அல்காரிஆ
  • 102.அத் தகாஸுர்
  • 103.அல் அஸ்ர்
  • 104.அல் ஹுமஸா
  • 105.அல் ஃபீல்
  • 106.குறைஷ்
  • 107.அல் மாஊன்
  • 108.அல் கவ்ஸர்
  • 109.அல் காஃபிரூன்
  • 110.அந் நஸ்ர்
  • 111.தப்பத்
  • 112.அல் இஃக்லாஸ்
  • 113.அல் ஃபலக்
  • 114.அந் நாஸ்