logo HARUN YAHYA

அல்கியாமா - குர்ஆன் - ஹருன் யஹ்யா

  • 1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
  • 2. நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
  • 3. (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
  • 4. அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
  • 5. எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
  • 6. "கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
  • 7. ஆகவே, பார்வையும் மழுங்கி-
  • 8. சந்திரன் ஒளியும் மங்கி-
  • 9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
  • 10. அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.
  • 11. "இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்).
  • 12. அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
  • 13. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
  • 14. எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.
  • 15. அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
  • 16. (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.
  • 17. நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
  • 18. எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
  • 19. பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
  • 20. எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
  • 21. ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
  • 22. அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
  • 23. தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.
  • 24. ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
  • 25. இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
  • 26. அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,
  • 27. "மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.
  • 28. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
  • 29. இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
  • 30. உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.
  • 31. ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.
  • 32. ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
  • 33. பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
  • 34. கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
  • 35. பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
  • 36. வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
  • 37. (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
  • 38. பின்னர் அவன் `அலக்` என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
  • 39. பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
  • 40. (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?
பகிர்
Facebook
X
WhatsApp
Telegram
QR Code
QR Code
1 அல் பாத்திஹா
2 அல் பகரா
3 ஆலு இம்ரான்
4 அன்னிஸா
5 அல் மாயிதா
6 அல் அன்ஆம்
7 அல் அஃராப்
8 அல் அன்ஃபால்
9 அத்தவ்பா
10 யூனுஸ்
11 ஹூது
12 யூஸுஃப்
13 அர் ரஃது
14 இப்ராஹீம்
15 அல் ஹிஜ்ர்
16 அந் நஹ்ல்
17 பனீ இஸ்ராயீல்
18 அல் கஹ்ஃபு
19 மர்யம்
20 தாஹா
21 அல் அன்பியா
22 அல் ஹஜ்
23 அல் முஃமினூன்
24 அந் நூர்
25 அல் ஃபுர்கான்
26 அஷ்ஷுஅரா
27 அந் நம்ல்
28 அல் கஸஸ்
29 அல் அன்கபூத்
30 அர் ரூம்
31 லுக்மான்
32 அஸ் ஸஜ்தா
33 அல் அஹ்ஸாப்
34 ஸபா
35 ஃபாத்திர்
36 யாஸீன்
37 அஸ் ஸாஃப்பாத்
38 ஸாத்
39 அஸ்ஸுமர்
40 அல் முஃமின்
41 ஃபுஸ்ஸிலத்
42 அஷ்ஷூரா
43 அஸ்ஸுக்ருஃப்
44 அத் துகான்
45 அல் ஜாஸியா
46 அல் அஹ்காஃப்
47 முஹம்மத்
48 அல் ஃபத்ஹ்
49 அல் ஹுஜ்ராத்
50 காஃப்
51 அத் தாரியாத்
52 அத் தூர்
53 அந்நஜ்ம்
54 அல் கமர்
55 அர் ரஹ்மான்
56 அல் வாகிஆ
57 அல் ஹதீத்
58 அல் முஜாதலா
59 அல் ஹஷ்ர்
60 அல் மும்தஹினா
61 அஸ் ஸஃப்
62 அல் ஜும்ஆ
63 அல் முனாஃபிகூன்
64 அத்தகாபுன்
65 அத்தலாக்
66 அத்தஹ்ரீம்
67 அல் முல்க்
68 அல் கலம்
69 அல் ஹாக்கா
70 அல் மஆரிஜ்
71 நூஹ்
72 அல் ஜின்
73 அல் முஸ்ஸம்மில்
74 அல்முத்தஸிர்
75 அல்கியாமா
76 அத் தஹ்ர்
77 அல் முர்ஸலாத்
78 அந் நபா
79 அந்நாஸிஆத்
80 அபஸ
81 அத் தக்வீர்
82 அல் இன்ஃபிதார்
83 அல் முதஃப்பிபீன்
84 அல் இன்ஷிகாக்
85 அல் புரூஜ்
86 அத்தாரிக்
87 அல் அஃலா
88 அல் காஷியா
89 அல் ஃபஜ்ரி
90 அல்பலது
91 அஷ் ஷம்ஸ்
92 அல் லைல்
93 அல்லுஹா
94 அஷ்ஷரஹ்
95 அத் தீன்
96 அல் அலக்
97 அல் கத்ர்
98 அல் பய்யினா
99 அஸ்ஸில்ஸால்
100 அல் ஆதியாத்
101 அல்காரிஆ
102 அத் தகாஸுர்
103 அல் அஸ்ர்
104 அல் ஹுமஸா
105 அல் ஃபீல்
106 குறைஷ்
107 அல் மாஊன்
108 அல் கவ்ஸர்
109 அல் காஃபிரூன்
110 அந் நஸ்ர்
111 தப்பத்
112 அல் இஃக்லாஸ்
113 அல் ஃபலக்
114 அந் நாஸ்