94. அஷ்ஷரஹ் - குர்ஆன்
- 1. நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
- 2. மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
- 3. அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
- 4. மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
- 5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
- 6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
- 7. எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
- 8. மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.