அல் காஷியா - குர்ஆன் - ஹருன் யஹ்யா
-
1. சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
-
2. அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
-
3. அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
-
4. கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
-
5. கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
-
6. அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
-
7. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
-
8. அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
-
9. தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
-
10. உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
-
11. அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
-
12. அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
-
13. அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
-
14. (அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
-
15. மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
-
16. விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
-
17. (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
-
18. மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
-
19. இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
-
20. இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
-
21. ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
-
22. அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
-
23. ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
-
24. அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
-
25. நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
-
26. பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.
பகிர்
1
அல் பாத்திஹா
2
அல் பகரா
3
ஆலு இம்ரான்
4
அன்னிஸா
5
அல் மாயிதா
6
அல் அன்ஆம்
7
அல் அஃராப்
8
அல் அன்ஃபால்
9
அத்தவ்பா
10
யூனுஸ்
11
ஹூது
12
யூஸுஃப்
13
அர் ரஃது
14
இப்ராஹீம்
15
அல் ஹிஜ்ர்
16
அந் நஹ்ல்
17
பனீ இஸ்ராயீல்
18
அல் கஹ்ஃபு
19
மர்யம்
20
தாஹா
21
அல் அன்பியா
22
அல் ஹஜ்
23
அல் முஃமினூன்
24
அந் நூர்
25
அல் ஃபுர்கான்
26
அஷ்ஷுஅரா
27
அந் நம்ல்
28
அல் கஸஸ்
29
அல் அன்கபூத்
30
அர் ரூம்
31
லுக்மான்
32
அஸ் ஸஜ்தா
33
அல் அஹ்ஸாப்
34
ஸபா
35
ஃபாத்திர்
36
யாஸீன்
37
அஸ் ஸாஃப்பாத்
38
ஸாத்
39
அஸ்ஸுமர்
40
அல் முஃமின்
41
ஃபுஸ்ஸிலத்
42
அஷ்ஷூரா
43
அஸ்ஸுக்ருஃப்
44
அத் துகான்
45
அல் ஜாஸியா
46
அல் அஹ்காஃப்
47
முஹம்மத்
48
அல் ஃபத்ஹ்
49
அல் ஹுஜ்ராத்
50
காஃப்
51
அத் தாரியாத்
52
அத் தூர்
53
அந்நஜ்ம்
54
அல் கமர்
55
அர் ரஹ்மான்
56
அல் வாகிஆ
57
அல் ஹதீத்
58
அல் முஜாதலா
59
அல் ஹஷ்ர்
60
அல் மும்தஹினா
61
அஸ் ஸஃப்
62
அல் ஜும்ஆ
63
அல் முனாஃபிகூன்
64
அத்தகாபுன்
65
அத்தலாக்
66
அத்தஹ்ரீம்
67
அல் முல்க்
68
அல் கலம்
69
அல் ஹாக்கா
70
அல் மஆரிஜ்
71
நூஹ்
72
அல் ஜின்
73
அல் முஸ்ஸம்மில்
74
அல்முத்தஸிர்
75
அல்கியாமா
76
அத் தஹ்ர்
77
அல் முர்ஸலாத்
78
அந் நபா
79
அந்நாஸிஆத்
80
அபஸ
81
அத் தக்வீர்
82
அல் இன்ஃபிதார்
83
அல் முதஃப்பிபீன்
84
அல் இன்ஷிகாக்
85
அல் புரூஜ்
86
அத்தாரிக்
87
அல் அஃலா
88
அல் காஷியா
89
அல் ஃபஜ்ரி
90
அல்பலது
91
அஷ் ஷம்ஸ்
92
அல் லைல்
93
அல்லுஹா
94
அஷ்ஷரஹ்
95
அத் தீன்
96
அல் அலக்
97
அல் கத்ர்
98
அல் பய்யினா
99
அஸ்ஸில்ஸால்
100
அல் ஆதியாத்
101
அல்காரிஆ
102
அத் தகாஸுர்
103
அல் அஸ்ர்
104
அல் ஹுமஸா
105
அல் ஃபீல்
106
குறைஷ்
107
அல் மாஊன்
108
அல் கவ்ஸர்
109
அல் காஃபிரூன்
110
அந் நஸ்ர்
111
தப்பத்
112
அல் இஃக்லாஸ்
113
அல் ஃபலக்
114
அந் நாஸ்