91. அஷ் ஷம்ஸ் - குர்ஆன்
- 1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
- 2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
- 3. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
- 4. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
- 5. வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
- 6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
- 7. ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
- 8. அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
- 9. அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.